Kavadi Echarikkai

எச்சரிக்கை

சீர்வள ருங்கதில் மாமலை மேவிய
செந்தமிழின் வாசா செந்தமிழன் வாசா – இந்தப்
பாருல கத்தில் அடியவர் போற்றிடும் பாலகுமரேசா!

வானவர் தானவர் மாமுனி வோர்தொழும்
வான் மயில் வாகனனே வான் மயில் வாகனனே –
தொந்தி யானைமுகனுக் கிளைய பராபரமாகிய வேலவனே!

பச்சை மரகத மேனியுறும் வாழை
பார்வதி பாலகனே பார்வதி பாலகனே – துய்ய
நச்சர வில் துயில் ராமன் மருமகனாகி வேலவனே!

அசுரர்கள் தேகம் திடீர்த் திடிரென
அற்று விழத்தானே அற்று விழத்தானே – அதிவீரமுள்ள
வெற்றி வேல்விட் ரெறிந்ததோர் ஆறு முகத்தானே!

கந்தா கடம்பா குகா ஞான சண்முகா
வேலாயுதப் பொருளே! வேலாயுதப் பொருளே!
அடியவேர்க்கு வரம் தந்திடும் மெய்ப்பொருளே!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *