பால் – அறத்துப்பால் | இயல் – பாயிரவியல் | அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் – 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
பொருள் : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.