பழனி பாதயாத்திரை விவரம் - 2024

பழனி பாதயாத்திரை பயண விபரம்

நிகழும் சோபிகிருது வருடம் தை 2 – ம் தேதி 16-01-2024 செவ்வாய்க்கிழமை முதல் தை மாதம் 22-ம் தேதி 05-02-2024 திங்கட்கிழமை வரை (21 நாட்கள்)

02 தை

16.01.2024 (செ)

தேவகோட்டை நகரப் பள்ளிக்சுடத்தில் காவடி கட்டி வைத்து பூஜை (அரோகரா செய்தல்)

03 தை

17.01.2024 (புத)

காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி பிள்ளையார் கோவிலில் தங்குதல்.

04 தை

18.01.2024 (விய)

காலை காவடியும், பாதயாத்ரீகர்களும் புறப்படுதல் பகல் உருத்தாங்கிணற்றில் (சங்கராபுரம்) காவடி நிவேத்தியம் இரவு குன்றக்குடி. (27 கி.மீ)

05 தை

19.01.2024 (வெ)

காலை குன்றக்குடியிலிருந்து புறப்பட்டு பகல் கண்டவராயன்பட்டி கண்மாயில் காவடி நிவேத்தியம் இரவு மருதுபட்டித் தோப்பில் முதல் நாள் பூஜை. (24 கி.மீ)

06 தை

20.01.2024 (சனி)

காலை சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் காவடி தங்குதல். பகல் மணப்பச்சேரியில் காவடி நிவேத்தியம் யாவு சமுத்திராப்ப்ட்டியில் இரண்டாம் நாள் பூஜை (28 கி.மீ)

07 தை

21.01.2024 (ஞா)

காலை நத்தத்தில் வாணியர் பஜனை மடத்தில் பானக பூஜை. பகல் உப்பாற்றில் காவடி நிவேத்தியம் இரவு இடைச்சி மடத்தில் முன்றாம் நாள் பூஜை (36 கி.மீ)

08 தை

22.01.2024 (திங்)

காலை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காவடி தங்கல் பகல் ரெட்டியார் சத்திரத்தில் காவடி நிவேத்தியம் இரவு நகரத்தார் ஊரணி என்கிற செம்மடைப்பட்டியில் ஊஞ்சல் நான்காம் நாள் பூஜை (35 கி.மீ)

09 தை

23.01.2024 (செ)

காலை செம்ம்டைப்பட்டியில் பானக பூஜை பகல் (ஒட்டன்சத்திரம் கடந்த) குழந்தைவேலன் சந்நிதியில் காவடி நிவேத்தியம் இரவு அடையாள வேலை தரிசித்து களிங்கப்பையா ஊரணி (சத்திரப்பட்டி சாலையில்) ஐந்தாம் நாள் பூஜை (19 கி.மீ)

10 தை

24.01.2024 (புத)

காலை ஆயக்குடி பெருமாள் கோவிலில் பானக பூஜை பகல் இடும்பன் குளத்தில் நீராடி இடும்பன் மலைச்சரிவில் காவடி நிவேத்தியம் இரவு பழனி அன்னதான மடத்தில் முதல் நாள் பூஜை (23 கி.மீ)

11 தை

25.01.2024 (விய)

தைப்பூசம் அன்னதான மடத்தில் இரண்டாம் நாள் பூஜை

12 தை

26.01.2024 (வெ)

அன்னதான மடத்தில் மூன்றாம் நாள் பூஜை தேவகோட்டை நகரத்தார்கள்

13 தை

27.01.2024 (சனி)

அன்னதான மடத்தில் நான்காம் நாள் பூஜை மகம் பகல் 2.௦௦ மணிக்கு மேல் புறப்பட்டு மலையில் காவடி செலுத்துதல்

14 தை

28.01.2024 (ஞா)

அன்னதான மடத்தில் ஐந்தாம் நாள் பூஜை தனியார் அபிஷேகங்கள்

15 தை

29.01.2024 (திங்)

அன்னதான மடத்தில் ஆறாம் நாள் பூஜை தனியார் அபிஷேகங்கள் இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு

16 தை

30.01.2024 (செ)

மலையில் சந்தனகுழம்பு அபிஷேகம் பாதயாத்ரீகர்கள் விடைபெற்று ஊர் திரும்புதல் 

17 தை

31.01.2024 (புத)

காலை 8.00 மணி அளவில் காவடி விடைபெற்று ஊர் திரும்புதல்

18 தை

01.02.2024 (விய)

காவடி வழி நடையாக ஊர் திரும்புதல் பகல் திண்டுக்கல் மலைகோட்டை ஐயப்பன் கோவிலில் பூஜை

19 தை

02.02.2024 (வெ)

காவடி வழி நடையாக ஊர் திரும்புதல் இரவு சமுத்திராபட்டியில் பானக பூஜை

20 தை

03.02.2024 (சனி)

காவடி வழி நடையாக ஊர் திரும்புதல் இரவு மருதுபட்டி தோப்பில் பூஜை

21 தை

04.02.2024 (ஞா)

திருப்பத்தூர் வழியாக காலை 7.00 மணியளவில் குன்றக்குடி வந்தடைதல் இரவு பூஜை

22 தை

04.02.2024 (திங்)

குன்றக்குடியிலிருந்து புறப்பட்டு பகல் அமராவதிபுதூர் மாலை தேவகோட்டை வந்து சேர்த்தல்

Call