பால் – அறத்துப்பால் | இயல் – பாயிரவியல் | அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் – 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள் : கடவுளின் உண்மைப் புகழை அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.