திருபுகழ்

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருவரன் – எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்க்கத் தமரரும் – அடிபேண

பத்துத்தலை தத்தக்கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்ட திகரியில் – இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்துடன் ரட்சித் தருளுவ – தொருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கந டிக்கக் கழுவொடு – கழுதாட

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்கு தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் திரிகட – எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென – முதுகூகை

கொட்புற்றேழு நட்பற் றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல – பெருமானே