நடராஜர் பதிகம் - பாடல் வரிகள்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!
ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!
மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்
செந்தமிழ்ச் சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்தபாத பங்கயம் உவந்தருள் நடேசனே

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அனுகிடாமல் ஈசனே தடுத்து வை
ஏத்தும் அன்பர் குழுவினில் என்னைச் சேர்த்துவை நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

ஆபயந்த ஐந்தினோடு பால் பழம் பஞசாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம்
நீபயந்த யாவையும் நினைக்களித்தேன் ஈசனே!
நேர்த்தியாய் அனைத்துமாடி வாழ்த்துவாய் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் வல்லனே
ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே
இட்ட மாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம்
என்றும் நல்கவல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

வில்லினால் அடிக்கவோ வீசுகள் பொருக்கவோ?
மிதித்த போதுகை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ
நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

ஆடநீ எடுத்தாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தக் கால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

மழுவெடுத்(து) எதை விளக்க மன்றுதோரும் ஓடினாய்
மதியெடுத்த சிரம் இருக்க மத்தானாய் ஏன் ஆடினாய்
கழுதெடுத்து நடனமாடும் காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
இன்று நான் படைத்தயாவும் உண்ணுவாய் சபேசனே
தடுத்த பண்டை வினையகற்றித் தாங்குவாய் சர்வேசனே
சரணம் உன்னயன்றி ஏது தாங்குவாய் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

வாழி நீ படைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்!
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே!
ஓய்ந்து சற்றென் நெஞ்சினைக் கண் சாய்ந்து கொள் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமரூபனே!
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே சங்கீதனே
வாமியாய் தலைத்த சிவகாமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே!

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

Sivapuranam lyrics Tamil – சிவபுராணம் பாடல் வரிகள்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்….

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

திருச்சிற்றம்பலம்!!!

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

மேலும் இந்த பாடல் மட்டுமல்லாது வேறு சிவபெருமானின் பாடல்களும் உள்ளது… இதனை படித்து பலன்களை பெறவும்…

ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…

சிவா காயத்ரி மந்திரம் 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவா காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

Sivalingam

நமசிவாய மந்திரம்

நமசிவாய மந்திரம் நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்தநாமம் நமசிவாய மந்திரம்

ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சிசெய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சிநல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியை போக்கிட
நன்மருந்தாய் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் – (நம)

வைத்தியராய் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்திய நாதனாக வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் வியக்கவைக்கும் நமசிவாய மந்திரம் – (நம)

தந்தையும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பண்ணியிரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணையிருக்கும் வீரசேகர் மந்திரம் – (நம)

புள்ளிருக்கு வேளூரென புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கு கனிவுகாட்டும் சாமியாம்
வள்ளிதெய்வ யானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் – (நம)

நம்மத்தையால் நாயகியாள் நானிலத்தைக் காக்கவே
கங்கையரைத் தங்கயராய்ப் பேணிமிகப் போற்றிட
தம்முடைய குங்குமமும் திருச்சாந்து மண்ணுமே
சந்நிதியில் வழங்குகின்ற சுந்தரேசர் மந்திரம் – (நம)

பாவரினைப் போற்றி மகிழ பாலாம்பாள் மகிழவே
வேலனவன் கூலமிகு சீலமுத்துக் குமரனாய்
ஞாலமிது ஞாலமுடன் அய்யநாடி பற்றியே
மக்கள் குறை தீர்க்கவந்த சொக்கநாதர் மந்திரம் – (நம)

 

திருச்சிற்றம்பலம்

அரஹர சிவனே ஆடுகவே

ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே
ஆடுக நடனம் ஆடுகவே
அரஹர சிவனே ஆடுகவே

சிவிகை லாசா பரமேசா
திருபுரம் எரித்த நடராசா
பவபயம் போக்கும் பரமேசா
பனிமலை ஆளும் சர்வேசா – (ஆடுக)

அறுகொடு தும்பை மலராட
அணிமணி மாலைகள் தானாட
பெருகிடும் கங்கை தலையாட
பிறைமதி எதுவும் உடனாட – (ஆடுக)

சூலம் உடுக்கை சுழன்றாட
சூழும் கணங்கள் உடனாட
ஆழம் குடித்தான் ஆடுகவே
அடியார் மகிழ ஆடுகவே – (ஆடுக)

ஆலவா யரசே சொக்கேசா
அவனியைக் காக்கும் பரமேசா
ஆலங்காட்டில் அடிடுவாய்
அரஹர சிவனே ஆடுகவே – (ஆடுக)

திருக்கட வூரின் கடயீசா
தில்லையம் பதியில் நடராஜா
திருமுல்லை மாசில்லா மணயீசா
திருநடனம் ஆடுக ஆடுகவே – (ஆடுக)

மயிலைக் கபாலி ஈஸ்வரனே
மதுரையில் அடிய ஆட்டமென்ன
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன
கால்மாறி ஆடுக ஆடுகவே – (ஆடுக)