Annadana Math and Siddha Tradition - அன்னதான மடமும் சித்த மரபும்
அதிருங்கழல் பணிந்து உன் அடியேன் உன்
அபயம்புகுவ தென்று நிலைக்கான
இதயம் தனில் இருந்து க்ருபை ஆகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
எதிர் அங்கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா!
பதிஎங்கிலும் இருந்து விளையாடிப்
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!
பழனி தேசிகர்
(தெய்வ சிகாமணி பண்டாரத்து மகன் தெய்வ நாயகப்பண்டாராம் – பார்வதி அம்மாள் தம்பதிகளின் வாரிசுகள் சார்பாக)
அன்ன தான மடம்
ஆவணி மூலவீதி, பழனி – 624 601
25/01/2024
பார்புகழும் பழனியில் ஆவணி மூல வீதிக்கும் கிழக்குப் புறம் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்து மனையில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் தேசிகர் வழித்தோன்றலான கார்த்திகேயன் தேசிகரின் மகனான குமரகுரு தேசிகராகிய நான், ஒரு முறை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததன் பின் அண்ணாமலையார் கோவிலைத் தரிசிக்க சென்ற போது ஒரு சித்தரைச் சந்திக்க நேர்ந்தது.
அவர் என் அருகில் வந்து உன் முன்னோர்கள் மிகவும் புண்ணியவான்கள் கண்ணிய மிக்க ஒரு சமூகத்தினரது தொடர்பால் மிகப் பெரிய தர்மத்தைக் காலங்காலமாக அவர்களுடன் துணைநின்று கட்டிக் காத்துவருபவர்கள். உன் மூதாதையர்காலம் பொற்காலம். அதை மீண்டும் கொண்டு வரவேண்டியது உன் கடமை உனக்கு வரும்.