
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா
கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அரோகரா
அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான் – அரோகரா
துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அரோகரா
அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ! – அரோகரா
வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – அரோகரா
ஆண்டிவேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ! – அரோகரா
சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச்
சேர்ந்து வணங்கிடுவோம் – அரோகரா
அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று கனிந்து நிற்போம்! – அரோகரா
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அரோகரா
அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்! – அரோகரா
செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அரோகரா
அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ! – அரோகரா
கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – அரோகரா
முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! – அரோகரா
ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம் – அரோகரா
சில ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்! – அரோகரா
ஊறுகள் தீர்க்கின்ற உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – அரோகரா
கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! – அரோகரா
வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – அரோகரா
இரு கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு! – அரோகரா
காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அரோகரா
அவன் கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்! – அரோகரா
அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள்
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2)
தென்பழநி ஆண்டவனே!
தேவர் சிறை மீட்டவனே (2)
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேண்டுமய்யா (அழகு)
உன்னையே நம்பி வந்தேன்!
உள்ளுருகி பாடி வந்தேன் (2)
உன் கோயில் நாடி வந்தேன்
உன் அருளைத் தேடி வந்தேன் (அழகு)
கண்டவுடன் பக்தி வரும் !
காவடியைச் சுமந்து வந்தேன் (2)
கால் நடையாய் நடந்து வந்தேன்
கவலைகளை மறந்து வந்தேன் (அழகு)
பால் குடத்தை ஏந்தி வந்தேன்!
பாத வலி மறந்து வந்தேன் (2)
கந்தா உன் பேரழகைக்
கண் குளிர காண வந்தேன் (அழகு)
வேலோடு நடந்து வந்தேன்!
வேதனையை மறந்து வந்தேன் (2)
வேலா உன் பதம் தொழுது
வேண்டும் வரம் கேட்க வந்தேன் (அழகு)
அருளாடி உருவினிலே!
ஆறுமுகா வந்திடுவாய் (2)
அறு கால் சவுக்கையிலே
பிரம்பெடுத்து ஆடிடுவாய் (அழகு)
அன்னமிடும் மடத்தினிலே!
நீ இருக்கும் பேரழகை (2)
ஆண்டவனே உனதருளால்
கண்டு நான் மகிழ்ந்திடுவேன் (அழகு)
எந்தன் உயிர் காவலனே!
எங்கும் நிறை வேலவனே (2)
என்னை நீயும் ஆண்டு கொண்டு
ஏற்றமுற செய்திடுவாய் (அழகு)
அருளாடி அழைத்து வரும்!
காவடியை பால் குடத்தை (2)
அன்புடனே ஏற்றுக்கொள்வாய்
அடியவர்க்கு வரமளிப்பாய் (அழகு)
சொந்தமுடன் நான் அழைக்க!
வந்திடுவாய் பழனி வேலா (2)
கண் திறந்து என்னை நீயும்
காத்தருள வேணுமய்யா
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு!
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள்
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு
சந்தன குடமே சாய்ந்தாடு!
கோல மயிலே சாய்ந்தாடு
கொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!
நெற்றியில் பிறந்த நித்திலமே
நீரினில் வளர்ந்த சித்திரமே
சுற்றிச்சுற்றி வருகின்றோம்
சுந்தர மயிலே சாய்ந்தாடு!!
கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட
கன்னித் தமிழால் தாலாட்ட
கீர்த்தி மிகவும் கொண்டவனே
சித்திரைநிலவே சாய்ந்தாடு!!
பிரணவப் பொருளை அறிந்தவனே!
ப்ரம்மனை திருத்தும் பேரறிவே!
சரவணப்பொய்கை வாழ்பவனே
சண்முக சிவனே சாய்ந்தாடு!!
தந்தைக்கு மந்திரம் சொன்னவனே!
தாயாய் அன்பைப் பொழிபவனே
மந்திரப் பொருளே மரகதமே
மடி மேல் ஏறி சாய்ந்தாடு!!
அண்ணன் வயிறோ பெரிதாகும்
அவனே கனியை உண்ணட்டும்
பின்னால் உனக்கு உதவிடுவான்
பொன்னே மணியே சாய்ந்தாடு!!
வெண்ணை தருவான் மாமனுமே!
வேலைத்தருவாள் அன்னையுமே!
பண்பைப் தருவான் அப்பனுமே
பாடல் தருவோம் நாங்களுமே
சிட்டே சிமிழே முருகையா
செந்தூர் வாழும் கந்தையா!!
எட்டுக்குடியின் வேலய்யா ஏரகத்
துரையே சாய்ந்தாடு!!
அன்பும் பண்பும் வளர்ந்திடவும்
ஆணவம் பொய்யும் நீங்கிடவும்
இன்பம் உலகில் நிலைத்திடவும்
இடைக்கழி முருகா சாய்ந்தாடு!!
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
வேல் வேல் முருகா வேல்முருகா
முருகா முருகா வேல் முருகா - பாடல் வரிகள்
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல்முருகா
தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்
தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தங்கரதம் மீதமர்ந்து கொலுவிருக்கும்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா
வண்ண மயில் வாகனத்தில் வேல்முருகன்
வள்ளி தெய்வயானையுடன் மால் மருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலை அழகன்
என்னகத்தில் காட்சி தந்தான் கலை அழகன்
கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டு வர
பழனி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர்ச் சோலையுடன் சுவாமி மலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்
சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தனிடம் தூது விடுத்தேன்
அந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகன் பேரழகை படம் பிடித்தேன்
பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே
கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே
வெந்நீறும் நெற்றியிலே பளபளக்க
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
பன்னீரும் மார்பினிலே கமகமக்க
பார்வதியின் பாலன் வந்தான் மனம்களிக்க
முருகாயென அழைத்தேன் முறுவல் கண்டேன்
குமராயென அழைத்தேன் குளுமை கண்டேன்
கந்தாயென அழைத்தேன் களித்து நின்றான்
கடம்பாயென அழைத்தேன் களித்து நின்றான்
காவடிகள் உன்னைத்தேடி ஆடி வரும்
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடி வரும்
சேவடியே சரணமென வாழ்பவர்க்கே
செல்வ நலம் தந்தருளும் கந்த வேளே
நல்ல தமிழ்ச் சொல்லெடுத்து நாளும் பாடு
நம் தலைவன் முருகனையே நாடி ஓடு
வல்ல கதிர் வேலவனும் வள்ளியோடு
வந்து நலம் தந்தருள்வான் வகையோடு
அஞ்சு வகைக் கனியெடுத்து அமுது செய்வோம்
ஆறுமுகன் மேனியிலே தொழுது பெய்வோம்
கொஞ்சும் எழில் குமரனுக்கு பூக்கள் கொய்வோம்
கூறு தமிழ்ச் சொல்லெடுத்து பாக்கள் நெய்வோம்
தண்ணாரும் பழனிமலை நடந்து செல்வோம்
சாலைவழி துன்பமெல்லாம் கடந்து செல்வோம்
கண்ணான முருகனையே கொஞ்சி மகிழ்வோம்
கருணை மழை பொழிகவென கெஞ்சி கேட்போம்
கல்லழுத்தி தாருரித்து தோலும் தேயும்
காலிரண்டும் கொப்பளித்து கன்னிப்போகும்
வெல்லமென கந்தனவன் பெயரைக்கூவ
வேதனைகள் தீர்ந்து நடை வேகம் கூடும்
கந்தனையே சொந்தமென எண்ணும்போது
கவலையென்னும் கடலதுவும் வற்றிப்போகும்
சிந்தனையில் தெளிவுவரும் செல்வம் சேரும்
செருமுனையில் பகையழிந்து வெற்றி கூடும்
சரணம் முருகையா - பாடல் வரிகள்
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
திங்கட்க்கிழமை உன்னைத் தேடி
திருச்செந்தூரும் வந்தேனே
அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை
அங்கே கண்டு மகிழ்ந்தேனே
செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி
திருப்பரங்குன்றம் வந்தேனே
தெய்வயானை திருமணக்கோலம்
அங்கே கண்டு மகிழ்ந்தேனே
புதன் கிழமை உன்னைத் தேடி
சுவாமி மலைக்கும் வந்தேனே
அப்பன் மகிழ மந்திரம் சொன்ன
அழகைக் கண்டு வியந்தேனே
வியாழக்கிழமை உன்னை தேடி
பழமுதிர் சோலையும் வந்தேனே
பழத்துக்காக கிழவன் ஆன
கதையை கேட்டு மகிழ்ந்தேனே
வெள்ளிக்கிழமை உன்னைத் தேடி
திருத்தணி மலைக்கும் வந்தேனே
சாந்தம் தவழும் திருமுக தரிசனம்
அங்கே கண்டு மகிழ்ந்தேனே
சனிக்கிழமை உன்னைத் தேடி
பழனி மலைக்கும் வந்தேனே
பஞ்சாமிர்தம் பாலில் தேனில்
குளித்திடும் அழகை கண்டேனே
ஞாயிற்றுக்கிழமை உன்னைத் தேடி
நானும் புறப்படும் வேளையிலே
வேலுடன் மயிலுடன் நேரில் வந்தாய்
என்னே உந்தன் கருணையப்பா
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
சரவனையிலே பிறந்த ஆறுமுக வடிவேலா
சரவனையி லேபிறந் தாறுமுக வடிவான
சண்முகா வருக வருக
தர்க்கமிடு சூரனை திக்கவேல் விட்டதொரு
சுவாமியே வருக வருக
அரவணையில் மால்மருக குமரகுரு பரனெங்கள்
ஆறுமுகா ஓடிவருக
அலைகடலின் மகரமீன் ஓடி விளையாடிய
அமரர்பதி வருக வருக
கருவனையில் நற்ச்சதுரவேல் நின்று நடனமிடும்
கணபதி துணைவன் வருக
கடியை எண்ணாயிரம் சமணரை வதைத்திடும்
கந்தனே ஓடி வருக
மருவணையில் பொண்ணாட உலகமது காக்கின்ற
வடிவேல் இலங்கு கரமும்
வாலவய தாயினது வாழ்மயில் எறிநட
மாடிவரு முருகேசனே
சிறுவயது முதற்கொண்டே
சிறுவயது முதற்கொண்டே திருசெந்தூர் முருகனை நான்
தினந்தோறும் வணங்கி வந்தேன்
இருவிழிகள் திறந்தவுடன் பழனிமலை ஆண்டியை நான்
இதயத்தில் வணங்கி வந்தேன்
பொறு மனமே பொறு அந்த ஆறுமுகத்தின் அருளாலே
போயொழியும் துன்பம் என்று
பொருத்தேனே! பொருத்தேனே! பொன்பழனி ஆண்டவனே
பொறுமைக்கு எல்லை உண்டே
ஒருபதிலும் கூறாமல் அருள் எமக்குத் தாராமல்
ஓடினால் என்ன செய்ய
ஓயாமல் நடக்கின் றேன்தாயான பெருமானே
வழிகாட்டு நானும் உய்ய
உறவினரும் உன்னையின்றி உதவுவதற்கு ஒருவரில்லை
ஓடவா! பழனி வேலா!
ஓடோடி நீ வந்து உன் பாதம் தொலோவோரை
உய்விப்பாய் குழந்தை வேலா!
கவலையை தீர்க்கும் கடவுள்
யார் யார் இருக்கினும் என் கவலை மாற்றுவது
ஆறுமுகக் கடவுள் என்று
அவனிமுதல் ஐம்பத்து அருகாத தேசமும்
அறியாதவரும் உண்டோ
ஈராறுகையனே இருமூன்று முடியனே
இனியகனி வாய் அழகனே
எட்டு எட்டு அறுபத்து நாலான தோளனே
ஏக காண போகமான
கார் ஆறும் மேனிகரிமுகனுக்கு இளையனே
கழுகாசல ஆறுமுகனே
கற்றறிஉற்றனே சித்தப்ர சித்தனே
கந்தப்பன் ஆதி தேவே
தார் ஆறும் ஐயனே துய்யனே ஐயனே
சரிசரி வரவேணுமே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமார குருவே
எத்தனை கவியமுதம் பாடியும் தேடியும்
இறங்காத வாறும் ஏது
ஏழைக்கு இறங்குவது சரவணப் பெருமாள்
இருக்கிறார் என்று உறையும்
சித்தர் முதல் வாக்கியம் கூறியது பொய்யோ
சிவா சுப்பிரமணிய நாதா
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் அன்றுநீ
செப்பியதும் யான் அறிகுவேன்
முத்தனே முதல்வனே முடியனே அடியேனே
முன்னின்று காக்க வாவா
முச்சுடருக்கு உரிய திருநாதனே வேதேனே
முப்புராதி அன்பர் குருவே
சப்தரிஷிமாதவா தாதவா கீதவா
தமிழ்நாடும் வாக்கு முதலே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமார குருவே
ஈராறு காதிலே யான்சொன்ன மொழியிலே
எள்ளவும் கேட்க வில்லையோ
இக்கலியுகத்திலே பற்பல கிரியிலே
என்னென்ன புதுமை செய்தாய்
பாரதனிற் பெரிய மெய்ஞான பண்டிதா
பன்னிரு கண்ணில்லையோ
பாவையர்கள் மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்டின்மேல் நினைவுற்றவா
தீரனே போர்கடகம் அணியும் அணிமார்பனே
தேவற்பணி பொற்பாதனே
செட்டிமகனே தங்கக்கட்டிமணியே இந்த
தந்திரம் செய்யலாமா
தீராகெம் பீரா ஒய்யாரா செந்துரா செஞ்
சேவற் கொடிக்கதிபா
செம்பொன் அம்பல சீலசண்முகம் அருள்பாட
தென் பரங்கி வேலனே
வீரவேல் வெற்றிவேல் வேல் வேல்
சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் – அந்தக்
கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச்
சாற்றுவது ஆறெழுத்து மந்திரம் – (வேல் வேல்)
ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை
அதிபர் சிந்தனைசெய் நெஞ்சமே – அந்த
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே – (வேல் வேல்)
கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் யாருமே – பரங்
குன்றுவளர் குகனோடு தாங்கிவரவே நமக்குள்
பொங்கிவரும் செல்வம் பதினாருமே – (வேல் வேல்)
ஆண்டி உடையில் அரசன்
பக்கமிரு மாத்திருக்கச் சொக்கவெள்ளி வேலெடுத்துப்
பச்சைமயில் உச்சிவரும் வேலனே! – உன்றன்
பஞ்சடியை நெஞ்சழுத்திப் பாற்குடத்தைத் தோளெடுத்தால்
அஞ்சிமிகக் கெஞ்சிடுவான் காலனே – (வேல் வேல்)
பழனிமலை மீதமர்ந்து பாட்டமுதை வேட்டருந்திப்
பாருலகை காத்தருளும் கந்தனே! – உன்றன்
பால்வடியும் பூ முகத்தை நாள்முடியப் பார்த்திருந்தால்
வேழமுடித்து வைத்திவிடும் பந்தமே – (வேல் வேல்)
ஆறுபடை வேலவனும் ஏறுமயில் மீதெழுந்தால்
கூறுமடி யார்வினைகள் மாறுமே – அந்த
ஆறுமுக வேலவனை ஆண்டியுடை கொண்டவனைப்
பழனிமலை மீதுவந்து பாருமே – (வேல் வேல்)
ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமணம் கொண்டவனை
அண்டியதும் நொண்டிவிடும் துன்பமே – அவன்
ஆறெழுத்து மந்திரத்தின் ஓரெழுத்தை ஓதிடினும்
பாரனைத்து பெற்றுத்தரும் இன்பமே – (வேல் வேல்)
கொஞ்சுதமிழ்ப் பாமாலை (வேல் வேல்)
கொஞ்சுதமிழ்ப் பாமாலைக்கும் நெஞ்சமெனும் பூமலைக்கும்
கோலமயில் ஏறிவரும் வேலவன் – அந்தப்
பிஞ்சுமன வேலவனைச் சஞ்சலம் தீர்மூலவனை
பேசுவது ஆறெழுத்து மந்திரம் – (வேல் வேல்)
வெள்ளமெனப் பாடிவரும் வேலவனை நாடிவரும்
வெற்றிமிகு மாந்தரது கூட்டமே – தினம்
கள்ளமிலா உள்ளமெல்லாம் மெள்ள மெள்ள ஓடிவரக்
கால்நடையில் புள்ளிமயில் ஆட்டமே – (வேல் வேல்)
சாலையிலே துங்குவதும் காலையிலே தாங்குவதும்
சண்முகனுக் கேற்றதொரு காவடி – நம்
வேலையெல்லாம் விட்டுவிட்டுக் காலைபகல் மாலையெல்லாம்
வீரநடை போடுவதும் சேவடி – (வேல் வேல்)
பள்ளயங்கள் போடுவதும் பந்தயமாய் ஓடுவதும்
பாலனுக்குப் போட்டதொரு பாலமே – தினம்
துள்ளிவரும் வேலேடுட்துப் புள்ளிமயில் வாகனுக்குத்
தோலுரியக் கால் நடக்கும் சீலமே – (வேல் வேல்)
தாங்குவதும் தூங்குவதும் தாளெடுத்து போடுவதும்
தந்தினத்தோம் போடுகின்ற தாளமே – தினம்
சங்குமுகம் பாடுவதும் சிங்கமுகம் ஓடுவதும்
சண்முகனுக் கேற்ற தொரு மேளமே – (வேல் வேல்)
ஆண்டியென உள்ளவனும் தூண்டியிலே வந்திடுவான்
ஆறுமுக சாமியினைப்பாடு – அவன்
கண்டிக்கதிர்காமமுடன் அடியவர் உள்ளமெல்லாம்
காத்திருப்பான் ஆறுபடை வீடு – (வேல் வேல்)
சாமிமலை பழனிமலை சார்ந்ததொரு தணிகைமலை
சண்முகவி லாசமெனக் கூறு – இந்த
பூமியிலே உள்ளவர்கள் சாமியெனப் போற்றிநிதம்
பூசுவதும் ஆறுமுகன் நீறு – (வேல் வேல்)
பாரி வளம் மீறிவரப் பக்தரெல்லாம் கூடி வர
பழமுதிரும் சோலையை நீ பாடு – தினம்
ஊறிவரும் பக்தியிலே ஏறிவரும் சக்தியினால்
உயர் அழகர் மலையினையே நாடு – (வேல் வேல்)
அழகான பழனிமலை ஆண்டவா
அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே
முருகா முருகா
முருகா முருகா
அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே
என்னை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா
எளியேனும் உன்னை பாட அருள்வாய் ஐயா
முருகா முருகா
முருகா முருகா
அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்
உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா
உலகாளும் ஆண்டவனே நீதான் ஐயா
அழகான பழனிமலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில்மீது முருகையனே
முருகா முருகா
முருகா முருகா
வேதனைகள் தீர்த்திடுவாய்!
அன்பு மனக்கோயிலிலே அய்யா உன்னை நானும்வைத்தேன்
ஆறுமுக வேலவனே அருள்தரவே வந்திடுவாய்! – (அன்பு)
எத்தனையோ பிறவிப்பெற்று இன்னல்மிக நானும்பெற்றேன்!
இன்னலின்றி வாழ்வுதர இதுதருணம் வந்திடிவாய்! – (அன்பு)
நீயிருக்கும் இடம்தேடி நானும்வரத் தெரியவில்லை!
நீலமயில் மீதமர்ந்து நீயுமிங்கே வந்திடுவாய்! – (அன்பு)
பாராளும் உந்தனுக்கு நானுமொரு பாரமல்ல!
பார்வதியின் திருக்குமரா பாலன்எனைக் காத்திடுவாய்! – (அன்பு)
கோலமிகு வள்ளியம்மை கரம்பிடித்த நாயகனே!
காலன்என்னை அணுகும்போது காத்தருள வந்திடுவாய்! – (அன்பு)
காவடியைக் கண்டவர்கள் கண்களிலே நீர்பெருகும்!
கந்தாஉன் திருப்புகழில் காலமெல்லாம் மனம்உருகும்! – (அன்பு)
பால்குடத்தைப் பார்த்தவர்கள் பாவமெல்லாம் பறந்தோடும்!
பழனிச்சாமி உன்னைத்தொழும் பக்தர்மனம் குளிர்ந்துவிடும்! – (அன்பு)
வேழமுகன் சோதரனே! வேதப்பொருள் உரைத்தவனே!
வேகமுடன் நீயும்வந்து வேதனைகள் தீர்த்திடுவாய்! – (அன்பு)
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அய்யா முருகா ஆடுகவே
ஆளிப்படுக்கை கொண்டோனின் அருமை மறுக்க ஆடுகவே
ஊளித்தாண்டி நிர்பானின் உத்தமச் செய்வா ஆடுகவே – (ஆடுக)
வாழும் மனிதர் யாவருக்கும் வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளுங் கவலை ஒடிடவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
ஆடக பொன்னால் ஊஞ்சலிட்டு அதற்கு வயிரக்கயிருமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே குமரா ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம் பண்பால் உயர்ந்தே வாழ்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம்பெறவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
முன்னே பின்னே சென்றாலும் முனையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும் எல்லாம் உன்னைச் சுற்றியதே – (ஆடுக)
குன்றாக் குடியாய் எமைக்காக்கும் குன்றக் குடியின் வேலவனே
கண்ணே மணியே கதிர்வேலா கவினார் ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
விண்ணவர் செல்வி தெய்வானை வேடவர்மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி மேதகு சேவற் கொடியாட – (ஆடுக)
கொண்டிடும் காதல் உணர்வோடு கனிந்த நெஞ்சத் தூங்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
கண்ணே தெரியாக் காட்டிடையே கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
ஆறடி நெடிதாம் உருவுடனே அடியார் பக்தி உருவேற்ற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே – (ஆடுக)
சீரடி வணங்கிட வந்துள்ளோம் செல்வா அருளைத் தந்திடுவாய்
ஆரிருள் விலகி ஒரிபெறவே ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – (ஆடுக)
கந்த வேலை வணங்கு
கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க – தினம்
கந்த வேலை வணங்கு – நம்
கவலையெல்லாம் போக்க
நாளும் பொழுதும் தீபம் ஏற்றி!
கந்த வேலை வணங்கு – நன்மை
யாவும் வீடு சேரும் பக்தியை நீ விரும்பு
பிறப்பு என்பது ஒருமுறை – அதில்
இறப்பு என்பது ஒருமுறை
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – (கந்த வேலை)
உண்மை அன்பு கொண்ட
நெஞ்சில் வாழுகின்ற தெய்வம்
உள்ளம் உருகி அழுபவர் – தமக்கு
துயரம் தீர்க்கும் தெய்வம்
கருணை பொங்கும் ஒருமுகம் – அது
கந்தன் குமரன் திருமுகம்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – (கந்த வேலை)
பாதம் நோக பயணம் – போக
பழனியப்பன் வருவான்
விதியை மாற்றி வினைகள் – அகற்றி
புதிய வாழ்வு தருவான்
ஆறெழுத்து மந்திரம் – அதை
சொன்னால் சுகம் தரும்
இருக்கும் வரையில் முருகன் நினைவில்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – நாம்
வாழ்வதில் நிம்மதி உண்டாகும் – (கந்த வேலை)
தங்கத் தேரில் வாவா
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா – வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்
ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோவமே
அரோகரா என்று சொல்லிப்பாடுவாரோமே
தேடி வந்தோர் வாழ்க்கையிலே நலங்கொடுத்திடும்
தெண்டபாணித் தெய்வமே நீ தங்கத்தேரில் வாவா – (வேல் வேல்)
பார்புகளும் பழனிமலை ஆண்டவனேவா
பரங்குன்றப் பேரழகே வெளியெடுத்து வா
சீர் மேவும் சரவணையில் தவழ்ந்தவனேவா
சிங்கார வேலவனே தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
வண்ணமயில் கொண்டவனே வா வா வா
வடிவழகே திருமுருகே ஓடோடி வா
எண்ணமெல்லாம் நிறைந்தவன் வா வா வா
எழில் நிலவே தங்கத்தேரில் ஏறிநீயும் வா வா! – (வேல் வேல்)
பிரணவத்தின் பொருள் உரைத்து பெருமை கொண்டவா
திறமைமிகு சூரர்படை வென்று வந்தவா
அருணகிரி பாட்டினிலே அகமகிழ்ந்தவா
அன்பரெல்லாம் மகிழ்ந்திடவே தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
ஆறுமுகம் ஆகிவந்த வேலவனே வா
அன்பருள்ளம் கோவில் காணும் ஆனந்தனே வா
கூரும் வினை தீர்த்துவைக்க வேலெடுத்து வா
குன்றம்கண்ட தண்டபாணி தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
காவடிக்கு வழித்துணையாய் வேலைத்தந்தவா
கடம்பனோடு இடும்பனையும் காவல் தந்த வா
ஆடிவரும் காவடியைக் காணவேண்டாமா?
அழகுமுகம் காட்டி இங்கே சிரித்து மகிழ வா வா! – (வேல் வேல்)
ஆடிவரும் காவடிக்குள் சேர்ந்துவருபவன்
அழகுமுகம் காட்டி அங்கே சிரித்து நிற்பவன்
அருளாசி உருவினிலே காட்சி தருபவன்
அவரோடு தனிமையிலே பேசிப் பேசி மகிழ்ப்பவன்! – (வேல் வேல்)
குட்டையய்யா குடும்பத்திலே சொந்தம் கொண்டவன்
கும்பிட்டோர் நலம்காக்கப் பிரம் பெடுப்பவன்
பிரம் பெடுத்து ஆடுகின்ற பேரழகேவா
பெருமை சொன்னோம் தண்டபாணி தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
உன்னருளால் வாழ்வதில் பெருமை கொள்கிறோம்
உன்வாசல் வருவதிலே சுகமும் காண்கிறோம்
எண்ணமெல்லாம் நிரைந்தவனே எழில் முருகேவா
வண்ணமயில் விட்டிறங்கித் தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
பலத்துக்காக சண்டை போட்டு பழனி சென்றவா
அவ்வைப் பாடலுக்கே பலமும் தந்து ஊதச்சொன்னவா
அள்ளித்தரும் வள்ளலே என் செந்திலாண்டவா
ஆனந்தமாய் வேல் பிடித்துத் தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
உன்னழகைக் காண்பதற்கே ஓடி வருகிறோம்
உன்னருளைப் பெறுவதற்கே தேடி வருகிறோம்
வண்ணமயில் ஏறிவரும் வடிவழகே வா
அன்னை தந்த வேலுடனே தங்கத்தேரில் வா வா! – (வேல் வேல்)
அன்னையவள் மீனாட்சி வாழ்த்தி மகிழ்கிறாள்
அப்பன் மதுரை சொக்கேசன் பெருமை கொள்கிறார்
தேவர்மகன் தெய்வானை மெல்ல சிரிக்கிறாள்
தினைப்புனத்து வள்ளிமயில் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறாள் – (வேல் வேல்)
பழனிமலை படியேறு
படிறேப்பா படியேறு பழனிமலையதன் படியேறு
படிபடியாக நீயேறு பல படியாக முன்னேறு
படிபடியாக நீயேறு பல படியாக முன்னேறு – (படி)
ஒருபடி ஏறிட முருகனவன் உயர்படியில் நம்மை ஏற்றிடுவான்
மறுபடி மறுபடி மலையேற மலைக்கும்ப்படி நம்மை மாற்றிடுவான் – (படி)
நித்தமுமே திருப்புகழைப்படி நிலைத்த உறுதியைக் கொண்டபடி
உம்மத அடியார் சென்றபடி உள்ளத்தில் முருகனை நினைத்தபடி – (படி)
அகத்தைக் கெடுக்கும் ஆசைப்படி அதனை முதலில் வாழ்வில்படி
புகழைக் கொடுத்தே காக்கும்படி புண்ணியபழனியின் திருப்படி – (படி)
சர்க்கரைகாவடி எடுத்தபடி சண்முகன் திருவருள் கிடைக்கும்படி
சந்ததி மறுபடி தலைக்கும்படி சரவணன் பாடல்கள் தினமும்படி – (படி)
வேலனை நினைப்போர் எண்ணப்படி வேண்டுவதெல்லாம் நல்லபடி
ஆண்டவன் முருகன் அளிக்கும்படி அன்பர்கள் ஏறும்பழனிப்படி – (படி)
செய்யும் தொழில்கள் சிறக்கும்படி சிந்தையில் முருகன் இருந்தபடி
பெய்வான் அருளை நல்லபடி பெற்றுநாம் வாழ்வோம் உயர்ந்தபடி – (படி)
வள்ளிக்கணவன் அருளின்படி வாடாமல்பயிர் தழைக்கும்படி
அள்ளித்தந்திடும் வள்ளல்படி அகிலமெல்லாம் அருள்பழனிப்படி – (படி)
பழனி ஆண்டவர் பவனிவருகிறார் தங்கத்தேரினிலே
பழனி ஆண்டவர் பவனிவருகிறார் தங்கத்தேரினிலே
பழனி ஆண்டவர் பவனிவருகிறார் தங்கத்தேரினிலே
மொட்டை போட்ட பக்தர் கூட்டம்
திருப்புகள் பாடும் அன்பர் கூட்டம்
தோளில் காவடி ஆடும் அழகு
பால்குடம் தலையில் போடும் நடனம்
உடலால் சுற்றும் அன்பர் கூட்டம்
காண வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
வேல்வேல் முருகா வெற்றிவேல்
என்றே குரல்கள் சேர்ந்தே ஒலிக்க
வா வா முருகா வடிவேல் அழகா
என்றே நாமும் சேர்ந்தே அழைக்க
கைகள் இரண்டும் சேர்த்துக் கும்பிட
காண வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
புஷ்பக் காவடி பன்னீர் காவடி
பறவைக் காவடி அக்கினிக் காவடி
மச்சக் காவடி மற்றய காவடி
சுற்றும் காவடி சுழலும் காவடி
செட்டிக் காவடி சர்க்கரை காவடி
காண வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
குடம் குடமாக பால்கள் சேர
பன்னீர் அங்கே மணக்க மணக்க
அரைத்த சந்தானம் வாசனை கூட
திருநீர் அங்கே சேர்ந்தே இருக்க
ஆண்டவன் மேலே அனைத்தும் பொழிய
அருள வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
தேனும் நெய்யும் வாழைப்பழமும்
கற்கண்டு சர்க்கரை பேரீச்ம்பழம்
போட்டே கரைத்த பஞ்சாமிர்தம்
அண்டா நிறைய வழிய வழிய
அவனுக்கு தரவே பக்தர்கள் ஏங்க
ருசிக்க வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
செல்வங்கள் வேண்டி வரங்கள் கேட்க
நோய்கள் தீர வழியைக் கேட்க
குழந்தை வேண்டி வரமும் கேட்க
நிம்மதி வேண்டி நெஞ்சம் கேட்க
எல்லாம் வேண்டும் என்றே கேட்க
கொடுக்க வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
அருணகிரியின் திருப்புகழ் ஒலிக்க
கண்ணதாசனின் தமிழும் முழங்க
செட்டிக் கவிகள் செப்பிய மொழிகள்
சேர்ந்தே நான்கு வேதமும் ஒலிக்க
பக்தர்கள் நாங்கள் பாடல்கள் பாட
கேட்க வேண்டிய ரத்தத்தில் ஏறியே – (பழனி ஆண்டவர்)
நீ அழைத்தால் நான் வருவேன் பழனி ஆண்டவா
நீ அழைத்தால் நான் வருவேன் பழனி ஆண்டவா
உனது அருள் கிடைத்தால் நலம் பெறுவேன் பழனி ஆண்டவா
சரணகோஷம் மலையைச் சுற்றி எதிர் ஒலிக்குதே
உனை காண வரும் பக்தர் கூட்டம் மனம் இனிக்குதே
நடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டம் நிறைந்தது
கந்தா உன்னை கண்டவுடன் காற்றில் பறந்தது (நீ அழைத்தால்……..)
சாலை வழி கூறிவரும் சரண கோஷங்கள்
வேலன் உந்தன் செவிகளுக்கு விருந்து படைத்திடும்
காலையிலும் மாலையிலும் கவிகள் பாடியே
நாளை எனும் நாள் கடந்து நானும் வருகிறேன் (நீ அழைத்தால்……..)
தங்கரதம் மீதமர்ந்து தரணி ஆள்பவா
தங்கமனக் கோவில் உண்டு தங்க ஓடிவா
இங்கும் அங்கும் பக்தர்களின் புகழில் சிறந்தவா
பொன்பழனி ஆண்டவனே பொறுத்து காத்துவா (நீ அழைத்தால்……..)
காவடிகள் ஆட்டத்திலே கனிந்து மகிழ்பவா
சேவடியே சரணமென நினைத்து வாழ்கிறோம்
பாலகனும் கால் நடையாய் நடந்து வருகிறோம்
பொன்பழனி ஆண்டவனே காத்து அருளவா (நீ அழைத்தால்……..)
வழிநெடுக உந்தன் நாமம் உச்சரிக்கையில்
விழி இரண்டும் கண்ணீரில் தத்தளிக்கையில்
அருள் காட்சி தரவேண்டும் உன்னை அழைக்கையில்
அரோகரா என்று சொல்ல சக்தி பிறக்குது (நீ அழைத்தால்……..)
ஆறுபடை வீட்டினிலே அமர்ந்த மன்னவா
ஆனைமுகன் தம்பியாக அவதரித்தவா
ஆறுதலை பன்னிருகை அய்யா வேலவா
ஆறுதலை கந்தனுக்கு அருளை காட்டவா (நீ அழைத்தால்……..)